தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா இவர் சமீபத்தில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் இத்தனை படம் வெளிவந்த பிறகு மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் திரைப்படமானது பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இதுவரை வெளிவந்த திரைப்படத்தின் மூலமாக உலகில் உள்ள பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே ஆரம்பத்தில் பாவத்துடன் பார்க்கப்பட்ட இந்த ஜெய்பீம் திரைப்படமானது தற்போது அரசியலாக பார்க்கப்பட்டு வருகிறது அந்த வகையில் பிரபல ஜாதியினரை அடையாளப்படுத்தி இழிவுபடுத்தி காட்டி உள்ளதாக பிரபல கட்சி தலைவர்கள் இவர் மீது புகார் கொடுத்தது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கத்தில் இது பெரும் சர்ச்சையாக பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து பிரபல கட்சி நிர்வாகி ஒருவர் சூர்யாவை எட்டி உதைத்தாள் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக தருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீட்டில் துப்பாக்கி கையில் ஏந்திய காவல் துறை அதிகாரிகள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பிரபல அரசியல்வாதியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் அவர்கள் சூர்யாவை நாயுடன் ஒப்பிட்டு கூறியதுபோல் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாக நாய்கள் திருடர்களை பார்த்து குரைக்கும் இல்லை என்றால் பேய்களை பார்த்து குறைக்கும்.
என்று கூறியது மட்டுமில்லாமல் சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை தவறாக உருவாக்கி உள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன் என நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.