அரசன நம்பி புருஷனை கைவிட்ட கதை போல் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய நடிகை.?

ethirneechal
ethirneechal

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் முக்கிய பிரபலம் திடீரென விலகி உள்ளாராம் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்பொழுது தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் 1 ஆக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. அப்படி வரம் தோறும் டிஆர்பியில் முன்னணி‌ வகித்து வருகின்றது. இவ்வாறு எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி கிருஷ்ணன்.

மாடலிங் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இவ்வாறு இதன் மூலம் பிரபலமான இவர் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார். இவ்வாறு நடிப்பின் மீது ஆசை இருந்தாலும் படிப்பு விஷயத்தில் சரியாக இருந்து வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு பல டிகிரிகளை முடித்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் அயலி வெப் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் இதில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சினை பெற்றது. இதன் பிறகுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தற்பொழுது இவரை தெரியாதவர்கள் யாரும் கிடையாது.

அப்படி சீரியல், திரைப்படங்கள் என ஏராளமானவற்றில் நடிப்பதற்கான வாய்ப்புகளை காயத்ரி கிருஷ்ணன் பெற்று வரும் நிலையில் எதிர்நீச்சல் சீரியலினை தொடர்ந்து ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். எனவே இந்த சீரியலின் பூஜையிலும் கலந்துக் கொண்ட நிலையில் சமீப காலங்களாக எதிர்நீச்சல் சீரியலில் இவரை காணவில்லை எனவே ரசிகர்கள் தேடி வந்த நிலையில் தற்பொழுது காயத்ரி கிருஷ்ணனுக்கு பதிலாக கிழக்கு வாசல் சீரியல் நடிகை தாரணி நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.