கௌதமிக்கு விபூதியடித்து 25 கோடியை ஆட்டையை போட்ட நபர்.. போலீசில் புகார் அளித்த நடிகை

gautami
gautami

Actress Gautami: நடிகை கௌதமி தனது 25 கோடி சொத்து அபகரிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருப்பது அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கௌதமி தற்போது வரையிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது தான் அதிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு வந்துள்ளார்.

இந்த சூழலில் நம்பிய ஒருவர் தனது 25 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துக் கொண்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை கௌதமி தென்னிந்திய சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் புற்றுநோயிலிருந்து பாதிக்கப்பட்டு மீண்டு வந்த இவர் சமீப காலங்களாக தொலைக்காட்சி தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு நடிப்பதையும் தாண்டி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி என்று பல மொழிகளில் 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். கடந்த 2004ஆம் ஆண்டு தனது மகளுக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். நான் சினிமா தொழிலில் 17 வயது முதல் சம்பாதித்த பணத்தின் மூலம் ஸ்ரீ பெரும்புதூரில் 46 ஏக்கர் நிலம் வாங்கினேன் தற்பொழுது அந்த இடத்தின் மதிப்பு 25 கோடியாகும்.

தனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் தனது மருத்துவ சிகிச்சைக்காக அந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன் இந்த நேரத்தில் கட்டுமான அதிபர் அழகப்பன் என்பவர் இந்த நிலத்தை விற்று தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். நான் அவரை முழுமையாக நம்பினேன் எனவே தனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் பட்டாணி) அழகப்பனுக்கு வழங்கினேன்.

அந்த சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டார். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்த மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்நிலையில் போலியாவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இது பற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து அபகரித்த அழகப்பன், அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார் எனவே இது குறித்து போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.