நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சுருதிஹாசனின் தங்கையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரில்லா. இதனை தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர் முதன்முதலில் டான்ஸ் ஷோ மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். பிறகு தனது சிறந்த நடிப்பு திறமையினால் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
கொடுத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு 100வது நாளில் எதிர்பாராத விதமாக ஐந்து லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளி வந்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்பொழுது விஜய் டிவியில் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் முரட்டுத்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் என்ன எனர்ஜியா ஆடுறீங்க என்று ஆச்சரியப் பட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.