கல்யாண கோலத்தில் பிக்பாஸ் கேப்ரியலா.. ரசிகர்களின் கண்களுக்கு குளிச்சியூட்டும் புகைப்படம்.!

gaberilla-
gaberilla-

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் கேப்ரியலா. அதை தொடர்ந்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மூணு திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் பின்பு அப்பா போன்ற ஒரு சில திரைப்படங்களில் சின்ன பெண்ணாக நடித்து அசத்திய கேப்ரியலா..

ஒரு கட்டத்தில் டாப் நடிகைகளுக்கு இணையாக சோசியல் மீடியாவில் விதவிதமான  புகைப்படங்களை வெளியிட தொடங்கினார். இவரது கிளாமர் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து கேப்ரியலாவிற்கு ஒருகட்டத்தில் சின்னத்திரையில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் கேப்ரியலா எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து  நீண்ட நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த கேப்ரியலா விற்கு  கிடைத்ததோ சீரியல் வாய்ப்பு தான். தற்போது கேப்ரியலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே சிசன்2 தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதில் காவியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியலா தனது அக்காவின் திருமணத்திற்கு ரெடியாகி கொண்டிருந்த காவியாவிற்கு எதிர்பாராத ட்விஸ்ட்கள் நடந்துள்ளன. காவியாவின் அக்கா காணாமல் போன நிலையில் அக்காவிற்காக பார்த்த மாப்பிள்ளையை காவியா திருமணம் செய்வது போன்ற கொடுமை ஏற்பட்டுள்ளது.

gabriyala
gabriyala

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இந்த திருமண எபிசோடு தற்போது மக்களிடையே பெரும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியலா அவரது சீரியலில் காவியா கேரக்டரில் திருமணக்கோலத்தில் அவர் போட்டுள்ள கெட்டப்பில் புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றன.

gabriyala
gabriyala