சுடிதாரில் தனது அழகை காட்டிய நடிகை கேப்ரியல்லா – வைரல் புகைப்படம் இதோ.

gaberilla

சின்னத்திரையில் தனது இளம் வயதிலேயே சீரியல்கள் நடன நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அறிமுகமானவர் கேப்ரியலா. பின்பு அவர் வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 3 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் நடிகை கேப்ரியலா சமுத்திரகனியின் அப்பா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் கேப்ரியலா மிகவும் ஸ்லிம்மாக காணபட்டதால் பெரிதும் படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. பின்பு பல ஒர்க்கவுட் செய்து செம ஃபிட்டாக சினிமா நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார்.

பின்பு கேப்ரியலா சினிமா நடிகைகளுக்கு நிகராக சோஷியல் மீடியாவில் விதவிதமான டிரஸை  அணிந்து புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்தார். பின்பு இவரது புகைப்படத்தை காண பல ரசிகர்களும் சோசியல் மீடியாவில் இவரை பின் தொடர ஆரம்பித்தன. பின்பு சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி நீண்ட நாட்கள் பயணித்தார் இருந்தாலும் டைட்டில் நம்மால் வின் பண்ண முடியாது என்பதை நன்றாக புரிந்து கொண்டு இடையிலே 5 லட்சம் பணம் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஆசையில் மற்ற நடிகைகள் போல தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஆனால் கிடைத்ததோ சீரியல் வாய்ப்பு தான் அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கேப்ரியலா டைட்டான டிரெஸ்ஸை அணிந்துகொண்டு ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

gaberilla
gaberilla
gaberilla