இயற்கை அழகை ரசித்தப்படி புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக்பாஸ் கேப்ரில்லா – சூப்பரான கமெண்டுகளை கொடுக்கும் ரசிகர்கள்.

gaberilla
gaberilla

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஜூனியர் என்ற நடன நிகழ்ச்சியின் மூலம்  மக்களிடையே அறிமுகமானவர் கேப்ரில்லா. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரது சிறந்த நடனத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7ஜி என்ற சீரியலில் பள்ளி மாணவியாக நடித்து வந்தார்.

இப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில்  தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்  திரைப்படமான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற திரைப்படத்தில் தனது இளம் வயதிலேயே சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.

பின்பு இவரது மெல்லிய உடல் எடையை மாற்றிக்கொண்டு ஒரு கம் பேக் கொடுத்து வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக இணையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இதன் மூலம் இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். கேப்ரில்லா பிக்பாஸ் வீட்டிலும் அவரது திறமையை வெளிப்படுத்தி 100 நாட்களைக் கடந்து தாக்கு பிடித்துள்ளார்.

இருந்தும் அவரால் பைனல்ஸ் வின் பண்ண முடியவில்லை என்றாலும் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் ஆஃபரை பயன்படுத்தி 5 லட்சத்து உடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவருக்கு விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக பணிபுரிந்தார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது இவர் ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற உடை அணிந்து புல்லின் மேல் போட்டோ ஷூட்டிற்க்கு போஸ் கொடுத்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

gaberilla
gaberilla
gaberilla
gaberilla