டாப் நடிகைகளுக்கு இணையாக சமீப காலமாக சின்னத்திரை நடிகைகளும் போட்டோ ஷூட் என்ற பெயரில் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அள்ளி தெளித்து வருகின்றன. அதில் தற்போது இளம் நடிகைகளில் ஒருவரான கேப்ரியல்லா சின்னத்திரையில் ஆரம்பத்தில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமாகி.
பின்பு வெள்ளித்திரையில் 3, அப்பா போன்ற ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். நடிகை கேப்ரியலா தொடர்ந்து பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வந்தார். அதில் ஒன்றாக தனது ஒல்லியான தோற்றத்தை உடற்பயிற்சி செய்து மாற்றிக் கொண்டு மற்ற நடிகைகள் போல இவரும் கவர்ச்சியில் இறங்கி புகைப்படத்தை அள்ளி தெளித்து வந்தார்.
அந்த வகையில் ஒரு கட்டத்தில் பல ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட கேப்ரியலாவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்துகொண்டு பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருக்கிற இடம் தெரியாமல் இருந்து இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் பயணித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட கேப்ரியலா வுக்கு கிடைத்ததோ சின்னத்திரை வாய்ப்புகள்தான். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் கேப்ரியல்லா.
தற்போது வழக்கத்துக்கு மாறாக புடவையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு பாகுபலி படத்தின் கங்குபாய் கெட்டப்பில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்காக என பதிவிட்டுள்ளார்.