நடிகர் விஜயகாந்த் திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்த பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய காதலரால் 14 மாதங்கள் சித்திரவதையை அனுபவித்ததாக கூறி புகார் அளித்துள்ள நிலையில் அது குறித்த உண்மையான தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. அதாவது கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமா கோஷம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை புளோரா.
இவர் தமிழில் கஜேந்திரா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தினை தொடர்ந்து குஸ்தி, குலேசன், திண்டுக்கல் சாரதி போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் இவ்வாறு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகை மட்டுமல்லாமல் மாடல் அழகி ஆவார் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஹிந்தியில் சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இப்படி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மிகவும் பிசியாக வெற்றியை கண்டு வந்த இவருடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது இந்தியா சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். அதாவது இன்ஸ்டால் பக்கத்தில் தன்னுடைய 20 வயதில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வந்தேன் அப்பொழுது ஹிந்தியில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தேன் இப்படி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு தயாரிப்பாளரின் மீது காதல் கொண்டேன் ஆனால் அதற்குப் பிறகுதான் என்னுடைய வாழ்க்கை மாறியது.
அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார் என்னுடைய முகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் என்னை காயப்படுத்தி என்னுடைய போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார் மேலும் என்னை 14 மாதங்கள் நடிக்க விடாமல் யாரிடம் பேச விடாமலும் சித்திரவதை செய்தார் கடைசியில் எப்படியோ அங்கிருந்து தானாக தப்பித்து என்னுடைய பெற்றோர்களிடம் திரும்பி வந்தேன்.
இந்த நகர வேதனை திணையில் இருந்து மீள எனக்கு சில காலங்கள் ஆனது ஆனால் தற்பொழுது நான் என்னுடைய பெற்றோர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என நடிகை புளோரா சைனி கூறியுள்ளார். இவர் இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல தயாரிப்பாளர் கௌரவங் தோஷியுடன் டேட்டிங் சென்று அங்கு கடுமையாக தாக்கி தாடை எலும்பை உடைத்ததாகவும் இவர் குற்றச்சாட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.