விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் இருந்தாலும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு என்றுமே ஒரு மவுசு உள்ளது ஏனென்றால் இவர் சிறுவயதிலிருந்தே விஜய் டிவியில் தான் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இவர் தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று தவிர்க்க முடியாத அளவிற்கு தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வளர்ந்துள்ளார்.மேலும் இவர் தற்போது சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் கால்தடம் பதித்துள்ளார்.
இப்படியிருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
மேலும் இவர் சிறந்த தொகுப்பாளினியாக இருப்பதால் பல விருதுகள் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட இவருக்கு டார்லிங் ஆப் த டெலிவிஷன் அவார்ட் வழங்கப்பட்டது. இவர் எப்போதெல்லாம் ஃப்ரீயாக இருக்கிறாரோ அப்போதெல்லாம் வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இவர் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் நீந்தியபடி பிரேக்பாஸ்ட் சாப்பிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் பிகினி எல்லாம் கிடையாது மாலத்தீவுக்கு எப்படி கம்மியான செலவில் வந்து சுற்றி பார்க்கலாம் என கூறி உள்ளார்.