மாடல் அழகியாக இருந்து பின் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கலந்து கொண்டு வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா. சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் இவருக்கான ரசிகர் பட்டாலும் கடுகடுவென உயர்ந்தன.
இதை உணர்ந்து கொண்ட தொலைக்காட்சிகள் உடனே அடுத்தடுத்த வாய்ப்புகள் கொடுத்து அழகு பார்த்தது. அதற்கேற்றார் போல தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். சின்னத்திரையில் இதுவரை அவர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் அந்த வகையில் செந்தூர பூவே, முள்ளும் மலரும், மின்னலே, அவளும் நானும் போன்ற சீரியல்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அதன்பின் வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின முதலாவதாக மோகன் ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சன்னி லியோனுடன் கைகோர்த்து ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கிடைக்கின்ற வாய்ப்புகளை திறம்பட கையாண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்.
ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது அழகும் திறமையும் பார்த்து கொண்டாடும் ரசிகர்களுக்காக அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா. இப்பொழுது கூட நடிகை தர்ஷா குப்தா சினிமாவில் ஹிட் அடித்தத பாடலுக்கு குத்தாட்டம் என்ற பெயரில் தனது அழகான மேனியை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
#Dharshagupta #actress pic.twitter.com/tRHPX4uiiI
— suresh (@suresh9590) January 22, 2022