ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரையிலும் நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. தற்போழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பவித்ரா, அஷ்வின், புகழ், சிவாங்கி,பாலா உள்ளிட்ட பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதே போலவே தான் முதன்முறையாக ருத்ரதாண்டவம் என்ற கிராமத்து திரைப்படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் தர்ஷா குப்தா.இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகளை செய்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீப காலங்களாக கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.
அந்த வகையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது. எனவே சாலையோர மக்கள் உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகிறார்கள். இவ்வாறு பசியும் பட்டினியாலும் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு ஒரு அமைப்பின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபகாலமாக சாலையோர மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். எனவே தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் நாம் அனைவரும் சுயமாக முன் வந்து அனைவருக்கும் உதவினால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்நிலையில் சற்று முன் இனிதே முடிந்தது இன்றைய நாள் எனக்கூறி இன்று சாலையோர மக்களுக்கு உணவளித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தர்ஷா குப்தாவை பாராட்டி வருகிறார்கள்.