விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் படும் பிரபலம். அதனால் சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மக்கள் மத்தியில் பரீட்சியமாகி வெள்ளித்திரையில் படவாய்ப்புகளை கைப்பற்றி தற்போது வளர்ந்து வரும் நடிகர், நடிகைகளாக திகழ்கின்றனர்.
அந்த வரிசையில் இடம் பெற்றுள்ள ஒருவர் தான் தர்ஷா குப்தா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து பிறகு தொடர்ந்து கிளாமராக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் தொடர்ந்து வாய்ப்பை கைப்பற்றினார்.
முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தென்பட்டு வந்த இவர் தற்பொழுது முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் சன்னி லியோன் நடிப்பில் உருவான ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். படம் அண்மையில் வெளி வந்து நல்ல வரவேற்பை பெற்றது இந்த படத்தை தொடர்ந்து
தர்ஷா குப்தா கையில் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருக்கின்றன. சினிமா உலகில் இப்படி தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தி ஓடிக்கொண்டிருக்கும் தர்ஷா குப்தா.. மறுபக்கம் தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த தொடர்ந்து புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தர்ஷா குப்தா மினுமினுக்கும் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வருஷத்தின் முதல் நாளே உங்க கிளாமர் தூக்கலா தான் இருக்கு வருகின்ற நாட்களில் என்னென்ன நடக்கும் போதோ எனக் கூறி விளையாட்டாக கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் புகைப்படம்..