பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தனது இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்தார்.
அவர் எதிர்பார்த்தது போல் இவருக்கு தற்போது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை உள்ள அனைவரையும் தன்பால் ஈர்த்தார்.
அதோடு முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக நடிக்க தொடங்கியுள்ளார். அந்தவகையில் முதன் முறையாக இவர் திரௌபதி திரைப்படம் ஹீரோவுடன் இணைந்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிந்து விட்டதாகவும் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் சில வாரங்களுக்கு முன்பு தர்ஷா குப்தா கூறி இருந்தார். அதோடு இத்திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்தில் எடுத்த திரைப்படமாகவும் அந்த வகையில் தர்ஷா குப்தா அச்சு அசல் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அலற விட்டு வந்த இவர் தற்போது கிராமத்து பெண் போல் புடவை அணிந்து அசத்தலான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.