நடிகை தர்ஷா குப்தா முதலில் மாடலிங் துறையில் சிறப்பாக பயணித்து பின்பு யூடியூப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெரிதும் வெளியிட்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருமளவு சேர்த்தார். இதன் மூலம் பின்பு சின்னத்திரையில் சன் டிவி ஜீ தமிழ் விஜய் தொலைக்காட்சி போன்ற பல டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
அந்த வகையில் இவர் கடைசியாக முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்து குடும்பங்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்பு சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி மற்றொரு பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் சிறப்பாக பயணித்து வருகின்றனர் அந்த காரணத்தினாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர். அதைப்போல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை தர்ஷா குப்தாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.
அந்த வகையில் முதல் படமாக மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி உடன் இணைந்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் போன்ற ஒரு சில முக்கிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா தொடர்ந்து ரசிகர்களை கவரும்.
வகையில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ரசிகர்களை கவரும் வகையில் மாடர்ன் டிரஸ் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றன.