தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது சில படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் ஹிட் பட ரீமேக் ஒன்றில் நடிக்கவுள்ளார். அந்த வகையில் 2019ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆர்டிக்கல் 15.
இந்த திரைப்படம் பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழில் ரீமேக் செய்ய உள்ளார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த அருண்ராஜா காமராஜ் இத்திரைப்படத்தை தமிழ் ரீமேக்கில் இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை தன்யா நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கருப்பன் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதோடு இன்னும் சில படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக முதன் முறையாக நடிக்க உள்ளார். ஆனால் நடிகை தன்யாக்கு என்ன ரோல் என்று சரியாக தெரியவில்லை. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் ஆர்டிகல் 15. எனவே இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.