தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து மித்ரன் ஜகவர், நானே வருவேன் போன்ற படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
தற்பொழுது இவர் தி கிரேன் மேன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் இயக்கி வருகிறார்கள் . இப்படத்தின் சூட்டிங் ஜனவரி மாதம் பூஜை போட பட்டப்பட்டது.
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கி உள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராமில் தனுஷை பற்றி உங்களை சந்தித்ததும், உங்களோட பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக அமைந்தது. உங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று கற்றுக்கொண்டேன்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று பதிவிட்டு தனுசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.