முன்பெல்லாம் ஏராளமான பிரபலங்கள் வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க தொடங்கியவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி இன்னும் சிலர் வெள்ளித்திரையில் வெற்றிகரமாக திரைப்படங்களில் நடித்து வந்து கொண்டிருக்கும் பொழுதும் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர்.
அப்படி 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்து சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கியவர் தான் நடிகை தேவயானி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி பங்காளி என ஏராளமான மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வந்த தேவயானி பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இவர் பெரும்பாலும் குடும்பப்பாங்கான கதை அம்சமுள்ள படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார். அதே சமயம் சீரியலிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு கதாநாயகியாக சினிமாவில் மார்க்கெட்டை இழந்த நிலையில் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
அப்படி இவருடைய நடிப்பில் வெளிவரும் சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க துவங்கியது. அந்த வகையில் கோலங்கள், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்களில் தேவயானி நடித்திருந்த நிலையில் மிகப்பெரிய ரீச்சை பெற்றது. கடைசியாக இவர் ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் நடித்திருந்த நிலையில் இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் தற்பொழுது வந்திருக்கும் தகவலின்படி நடிகை தேவயானி ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சீரியலில் தேவயானி உடன் இணைந்து நடிகை விஜி சந்திரசேகரும் நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது.