விவேக்குடன் நடித்தது ஒரு குத்தமா அதுக்காக வடிவேலு வாய்ப்பு தரலை.! பேட்டியில் குமுறிய நடிகை.!

vadivelu
vadivelu

ஒரு படத்தில் முன்னணி நடிகர்களுக்கு எந்த அளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் அந்த படத்தில் நடிக்கும் காமெடி நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது வழக்கம் அப்படி தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பாவனாக இருந்து வருபவர் தான் வடிவேலு.

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வரும் வடிவேலு குறித்து தற்பொழுது பிரபல நடிகை பேட்டி ஒன்றை அடித்துள்ளார். வடிவேலு பல சர்ச்சைகளில் சிக்கி வந்ததனால் சில காலங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

தற்பொழுது தான் தொடர்ந்து நடித்து வருகிறார் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது இவ்வாறு வடிவேலு நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சை இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக வடிவேலு குறித்து அவருடன் நடித்த ஏராளமான நடிகர், நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவிஸ்ரீ வடிவேலு பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு சாருடன் ஒரு படத்தின் நடித்திருந்தேன் இதனை அடுத்து எனக்கு விவேக் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது விவேக் படத்தில் நடித்த பிறகு எனக்கு வடிவேலு அவருடைய படத்தின் நடிக்க வாய்ப்பு தரவில்லை சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுக்கு போனில் அழைத்து வாய்ப்பு கேட்டேன் ஆனால் நான் யார் என்று தெரியாதது போல் என்னிடம் பேசினார் என்று தேவி ஶ்ரீ கூறியுள்ளார்.

இவ்வாறு நடிகர் வடிவேலு தொடர்ந்து தன்னுடன் நடித்த சக நடிகர் நடிகைகளை முன்னேற விடாமல் செய்வது வழக்கமாக வைத்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். இவர் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.