நடிகைகள் அதை காட்டுன மட்டும் தான்.. சினிமாவில் பிரபலமாக முடியும்.? நடிகை தேவயானியின் பேச்சால் வெடித்த சர்ச்சை

devayani
devayani

90 கால கட்டங்களில் வெற்றி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி.  இவர் முதலில் குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் கிளாமர் ரோலில் நடித்து பின் ஹீரோயின்னாக அறிமுகமானார். நடிகை தேவயானி திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், விக்ரம், பார்த்திபன், ராமராஜன், கமல் போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார் நடிகை தேவயானி.

இப்படி திரை உலகில் வெற்றி நடிகையாக ஓடிய இவர் இயக்குனரும், நடிகருமான ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்றாலும் நண்பர்களின் உதவியின் மூலம் திருமணத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர் இவர்கள் இருவருக்கும் தற்போது இரு மகள்கள் இருக்கின்றனர்.

நடிகை தேவயானி வயது முதிர்வின் காரணமாக  பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது இதனால் அவர் சின்னத்திரை பக்கம் தற்போது தலை காட்டி நடித்து வருகிறார்.  இப்படிப்பட்ட நடிகை தேவயானி அவ்வப்பொழுது தனது திரை பயணத்தில் சந்தித்த நடிகர், நடிகைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

அப்படி ஒரு பேட்டியில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி அதிர வைத்தார். தேவயானி சொன்னது.. தமிழ் சினிமாவில் அப்போது விட தற்போது  தான் அதிகமாக கவர்ச்சி உள்ளது. இந்த காலத்தில் கவர்ச்சி காட்டும் நடிகை தான் பிரபலமாக முடியும் என நடிகை தேவையானி கூறினார்.

இது தற்போது மிகப்பெரிய ஒரு சர்ச்சையாக விடுத்துள்ளது. பலரும் சினிமாவில் கவர்ச்சியையும் தாண்டி திறமையான நடிகைகள் இருக்கிறார்கள் அவர்கள் உங்களுக்கு கண்களுக்கு தெரியவில்லை எனக் கூறி  பல்வேறு விதமான கமெண்ட்களை கொடுத்து தற்போது வருகின்றனர்.  இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.