பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோன்.! ‘பதான்’ படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

pathan
pathan

சினிமாவை பொறுத்த வரையிலும் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவாகத்தான் சம்பளம் தருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மட்டுமே நடிகர்களின் அளவிற்கு சம்பளம் வாங்கி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நயன்தாராவை கூறலாம்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாக இருந்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் நயன்தாரா போலவே பாலிவுட்டில் எந்த நடிகை அதிகளவு சம்பளம் பெறுகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தீபிகா படுகோன் தமிழில் ஓம் ஷாந்தி ஓம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பிறகு பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் தீபிகா படுகோன் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதனை அடுத்து சமீபத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் பதான் படம் வெளியானது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல சர்ச்சைகளில் சிக்கியது ஏன் என்றால் இந்த படத்தின் பாடல் வெளியான நிலையில் அதில் தீபிகா படுகோன் காவி நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்திருந்தார் எனவே இது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆனால் பல விமர்சனங்களுக்கு பிறகு வெளியான பதான் படம் இதுவரையிலும் உலகளவில் 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அந்த வகையில் அதிக வசூலை பெற்ற இந்திய படங்களில் பதான் படமும் ஒன்று என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் தீபிகா படுகோன் 18 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன் திகழ்ந்து வருகிறார்.