திரௌபதி பட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகை தர்ஷா குப்தா..! அடுத்த சம்பவத்துக்கு ரெடியாட்டாங்க போல.!

mohan
mohan

வெள்ளித்திரையில் இயக்குனர் மோகன் இயக்கிய திரைப்படம் தான் திரௌபதி இந்த திரைப்படத்தில் அஜித் மச்சான் ஆகிய ரிச்சர்ட் நடித்திருப்பார் பல சர்ச்சைக்குரிய விமர்சனத்தை இந்த திரைப்படம் பெற்றாலும் வசூல் வேட்டையில் அதிக வசூலித்து சாதனை படைத்தது என்பது பலருக்கும் தெரியும்.

மேலும் இயக்குனர் மோகன் அடுத்ததாக ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம், ஈசன் அருளால் அனைத்து செயல்களும் நன்றாக நடக்கும் என்று சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தார்.

திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்ட் தான் இந்த திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக எந்த நடிகை நடிக்கயிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

dharsha
dharsha

ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை தர்ஷா குப்தா தான் நடிக்க உள்ளாராம் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் சின்னத்திரையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 என்ற ரியாலிட்டி ஷோவில் நடித்துவருகிறார்.

இதனையடுத்து ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் என்பதை இயக்குனர் மோகன் சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியும்.

இந்த திரைப்படத்தில் தர்ஷா குப்தா நடித்தால் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்குவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

dharsha
dharsha