சித்தாரா : சினிமா உலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளகின்றனர். ஆனால் ஒரு சிலர் காதல், கல்யாணம் போன்றவற்றில் எதிலும் சிக்காமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்கின்றனர் அப்படி ஒரு நடிகை 50 வயதை கடந்த பிறகும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
அவரைப் பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்.. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா.
படத்தில் ரஜினி உடன் இணைந்து சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, சித்தாரா, மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், நாசர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் அந்த வகையில் சித்தாரா ரஜினிக்கு தங்கையாக சூப்பராக நடித்து மக்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கினார்.
இப்படிப்பட்ட நடிகை சித்தாரா 50 வயதை தாண்டியும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார் இன்று வரை அவர் திருமணம் செய்து கொள்ளாமல் வருவதற்கு காரணமாக இருக்கிறது. இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி என கூறப்படுகிறது இதனால் இவர் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த ஒருவரை காதலித்து வந்தார்.
அந்த காதல் தோல்வியில் முடிந்தன அதன் காரணமாக விரக்தியில் கல்யாணத்தை ஒதுக்கி முரட்டுசி சிங்கிளாக இன்று வரை இருந்து வருகிறாராம் அது மட்டுமல்லாமல் அவரது தந்தை மரணமும் அவரை வாட்டி வதைத்தன. அந்த காரணத்தினால் ஒண்டிக் கட்டையாகவே இருந்து வருகிறாராம்.