சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்தவகையில் அவர்கள் பலரும் தற்போது கதாநாயகியாக நடிக்க கூட ரெடியாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள் அதற்கு தகுந்தார் போல தான் சில குழந்தை நட்சத்திரங்களும் நடந்துகொள்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் கேப்ரில்லா இவ்வாறு இவர் இந்த திரைப்படத்தில் காது வாய் பேச முடியாத குழந்தையாக நடித்திருப்பார்.
மேலும் இத் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நமது கேப்ரில்லா பிரபல நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று தன் புகழை நிலை நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு நமது கேரளாவுக்கு கிடைத்தது அந்த நிகழ்ச்சிகள் தன்னுடைய சிறந்த திறனை வெளிக்காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கேபி கவர்ந்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் ஒன்றில் நடிக்கப் போவதாக தெரியவந்துள்ளது அது வேறு எந்த சீரியலும் கிடையாது ஈரமான ரோஜாவே என்ற சீரியல் தான்.
இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிகை கேப்ரியலா நடிக்க உள்ளதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் உங்களை கதாநாயகியாக பார்க்க ஆசைப்படும் திடீரென சீரியலுக்கு சென்று விட்டீர்கள் என வருத்தத்தில் உள்ளார்கள்.