பொதுவாக சினிமாவில் நடிகர்கள் போல நடிகைகள் நீண்ட காலங்கள் வரை ஹீரோயினாக நடிக்க முடியாது. குறிப்பிட்ட வயது வரையும் தான் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அந்தவகையில் ஹீரோயினாக நடித்துவிட்டு திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை பூமிகா. இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி போன்ற மொழித் திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில் 2007ஆம் ஆண்டு பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிக்காமல் அக்கா வேடங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் யு டர்ன், கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது கண்ணை நம்பாதே என்ற திரைப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பூமிகாவின் அழகு என்றால் அவரின் எடுப்பான உதடுகள் தான். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நான் சிறிய வயதாக இருக்கும்போது என் உதடு பெரியதாக இருக்கிறது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். எனவே நான் கடவுளிடம் என் உதடு எப்படியாவது சிறிதாக வேண்டும் என்று அடிக்கடி வேண்டியுள்ளேன் என்று கூறியுள்ளார்.