சினிமாவில் திமிரு பிடிவாதம் பிடித்த பல நடிகைகள் இருக்கிறார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அந்த லிஸ்டில் கூட சேர்க்க முடியாத அளவிற்கு ஒரு நடிகையும் இருக்கிறார். அவர் ஒரு சில திரைப்படங்களில் சிறு கேரக்டர்களில் தலையை மட்டும் காட்டி வந்த அந்த பிரபல நடிகை தன்னை தானே உலக அழகி ரேஞ்சிக்கே புகழ்ந்து பேசி பிரபலமாகி விடுவாராம்.
அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகைக்கு நான்தான் நம்பர் ஒன் என்றும் தன்னைப் பார்த்தது தான் மற்ற நடிகைகள் மேக்கப் போடுகிறார்கள் என்றும் கூறி தன்னைத் தானே புகழ்ந்து கொள்வாராம். இப்படி பப்ளிசிட்டி தேடி வரும் அந்த நடிகைக்கு பாவப்பட்டு ஒரு இயக்குனர் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
கிடைத்த வாய்ப்பை சரிதியாக பயன்படுத்திக் கொள்ள தெரியாத அந்த நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் ஹாலிவுட் நடிகை ரேஞ்சிக்கு ஓவராக அலப்பறை செய்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் இடைவேளையில் அனைவருக்கும் தெரியும்படி சிகரெட் பிடித்திருக்கிறார்.
இதைப் பார்த்த பலரும் அந்த சைக்கோவிடம் யார் பேசுவார் யாரு கேட்பார் என்று அமைதியாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகை சிகரெட் பிடிப்பதை பார்த்த ஒரு காமெடி நடிகர் அந்த நடிகையிடம் இது தப்பு என்று கூறி இருக்கிறார் அதற்கு அந்த நடிகை சிகரெட்டை பிடித்து அவர் முகத்திலேயே புகையை ஊதி இருக்கிறார்.
இதனால் அதிர்ந்து போன அந்த காமெடி நடிகர் அந்த படத்தின் இயக்குனரை சந்தித்து நடந்ததை கூறியிருக்கிறார். இதை கேட்டதும் கோபப்பட்ட அந்த இயக்குனர் அந்த நடிகையை கூப்பிட்டு கண்டித்ததோடு மட்டுமல்லாமல் உன்னை பாவம் பார்த்து இந்த படத்தில் நடிக்க கூப்பிட்டால் ஓவரா தான் நடந்து கொள்கிறாய் என்று ஒழுங்கா இடத்தை காலி பண்ணு என்று கழுத்தை பிடிக்காத ஒரு குறையாக சூட்டிங்ஸ் பாட்டை விட்டு விரட்டி இருக்கிறார்.
கிடைத்த வாய்ப்பு பறிபோனதால் நொந்து போன அந்த நடிகை கொஞ்சம் கூட மனம் வருத்தம் இல்லாமல் அந்த இடத்தில் இருந்து திமிராக தான் வெளியேறியிருக்கிறார். அதன் பிறகு பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த அந்த நடிகை வாய் திமிரு குறையாமல் பேசியதால் சட்டரீதியான பல பிரச்சினைகளையும் சந்தித்தார். சோசியல் மீடியாவில் பரபரப்பாக வைத்திருந்த அந்த நடிகை தற்போது எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை.