வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் விடுதலை இந்த படத்தில் கான்ஸ்டபிள் குணசேகரனாக சூரி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில் இவரை தொடர்ந்து விஜய் சேதுபதியும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் அமோக வெற்றியை பெற்றது. விஜய் சேதுபதி, சூரி இவர்களுடைய கேரக்டரை தாண்டி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் தமிழரசியாக நடித்த பாவனி ஸ்ரீ. மாடலிங் துறையில் பணியாற்றி வந்த பாவனி ஸ்ரீ பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் சகோதரி ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இதனை அடுத்து சமீப காலங்களாக மாடலுடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் மாடலிங்கில் மிகவும் ஆர்வமுடையவர்.
இவ்வாறு செம ஸ்டைலாக மாடலிங்கில் கலக்கி வரும் பாவனி ஸ்ரீ விடுதலை திரைப்படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். எனவே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்த நிலையில் தற்போது இவர் மாடல் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விடுதலை பட தமிழரசியா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு கிராமத்து கெட்ட போலவே மாடல் உடைகளும் இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் மூலம் பாவனி ஸ்ரீ தமிழ் சினிமாவில் பல படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.