மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகப்போகும் நடிகை பாவனா..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

bhavana-1
bhavana-1

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பாவனா இவர் தமிழில் முதன்முதலாக சித்திரம் பேசுதடி என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக தமிழில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி விட்டார்.

அதனை தொடர்ந்து அவர் ஜெயம் கொண்டான் மற்றும் தீபாவளி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் என்னதான் இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்தாலும் சரி அவர் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

அந்த வகையில் கன்னட திரைபடத்தில் மட்டும் நடித்து வந்த நமது நடிகை படத்தில் அவருடைய நடிப்பில் கோவிந்தா கோவிந்தா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அந்த நடிகை சுமந்த் என்ற நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இது ஒருப்பக்கம் இருக்க நடிகை பாவனா கடந்த 2013ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து கேரளா வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது கொச்சி அருகே கடத்தப்பட்டார் அந்த வகையில் இவர் கடத்தப்பட்டு பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார்.

bhavana-1
bhavana-1

இந்நிலையில் பாவனா கொடுத்த வாக்கின்படி மலையாள நடிகர் திலீப் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கைதானது மட்டுமில்லாமல் அவருடைய மனைவி மஞ்சு வாரியர் திலிப் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில் பல்வேறு பிரச்சினைக்கு பிறகாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை பாவனா மீண்டும் தமிழில் திரைப்படங்கள் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

bhavana-1
bhavana-1