தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு சில காலங்கள் கழித்து சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வரும் பல நடிகைகள் இருக்கிறார்கள்.அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பாவனா.
இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தீபாவளி, வெயில் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவர் கடைசியாக அஜித்துடன் இணைந்து அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் நடிப்பதை நிறுத்தி விட்டு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாளத் திரையுலகில் இவரின் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டதால் நீண்ட காலங்களாக நடிக்காமல் இருந்து தற்போது மீண்டும் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நடிகை பாவனா மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நரேந்ரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் பாவனா. இந்நிலையில் மீண்டும் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுப்பதால் தனது உடல் எடையை குறைத்து சிக்கென்று மாறி உள்ளார்.
ஊரடங்கு நேரத்திலும் தொடர்ந்து ஜிம் வொர்க் அவுட் மற்றும் உடற்பயிற்சி செய்து 12 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ஏனென்றால் இளம் மோட்டாக திரைப்படங்களில் நடித்து வரும் பொழுது கூட இவ்வளவு அழகாக இல்லை தற்பொழுது மிகவும் ஸ்லிம்மாக அழகாக இருப்பதால் ரசிகர்கள் அந்த புகைப்படத்துக்கு லைக்குகளை அளித்து குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.