13 ஆண்டுகளுக்குப் பிறகு கோலிவுட்டுக்கு அறிமுகமாகும் நடிகை பாவனா.! ஹீரோ பிக்பாஸ் பிரபலமா.? உற்சாகத்தில் ரசிகர்கள்..

bhavana
bhavana

பிரபல நடிகை பாவனா 13 வருடங்கள் கழித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள் அதாவது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பாவனா இவர் இதற்கு முன்பே மலையாளத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த 2002ஆம் மலையாளத்தில் வெளிவந்த நம்மாளீ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை கமல் இயக்கியிருந்தார். இதனை அடுத்து வெயில், தீபாவளி, ராமேஸ்வரம் என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அந்த வகையில் பாவனா மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியிலும் சிறந்த நடிகையாக விளங்கினார் இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார் பிறகு இவருக்கு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார்.

மலையாளத்திலும் சில பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டதன் காரணமாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் தற்பொழுது இவர் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிக்க இருக்கிறார் இன்று தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமனுடன் இணைந்து தன்னுடைய புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் இது திரைப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் தான் பாவனா தன்னுடைய திரை வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.