கவர்ச்சியால் ஒரு காலத்தில் ரசிகர்களை கட்டிப்போட்ட பானுப்பிரியாவா இது.! இப்படி டோட்டலா மாறிவிட்டாரே.!

சினிமாவில் நடிகைகளாக இருந்தால் குறிப்பிட்ட வயது வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகைகளாக வலம் வர முடியும் அதன் பிறகு அம்மா, துணை நடிகை போன்ற குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தான் தொடர்ந்து நடித்து வருவார்கள். அதிலும் ஒரு சில முன்னணி நடிகைகளாக வந்த சிலர் சினிமா பக்கமே தலைகாட்ட மாட்டார்கள்.

ஆனால் அறிமுகமான காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் தற்பொழுது அம்மா போன்ற கேரக்டர்களிலும் நடித்து தற்போது வரையிலும் மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை பானுப்பிரியா. இவர் 80 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தார்.

இவரின் சிறந்த நடிப்புத் திறமையினாலும், கவர்ச்சியான கட்டுக்கோப்பான உடல் அமைப்பினாளும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட இவர் இயக்குனர் பாக்யராஜ் ஒரு பள்ளியின் ஆண்டு விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

அங்கு பானுப்பிரியா பரதநாட்டியம்,குச்சுப்புடி போன்ற நடனங்கள் ஆடி உள்ளார். அந்த வகையில் இவரின் திறமையை பார்த்து பாக்கியராஜ் தனது திரைப்படம் ஒன்றில் நடிக்க வைத்துள்ளார். அந்த வகையில் பானுப்பிரியா தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது பதினாலு வயது தனது 14 வயதில் இருந்து தற்போது வரை சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் தமிழின் மூலம் அறிமுகமானாலும் தமிழை விட தெலுங்கில் தான் சிறந்த நடிகையாக வலம் வந்துள்ளார்.  அந்த வகையில் தெலுங்கில் சுமார் 80 திரைப்படங்களிலும் தமிழில் சுமார் 35 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பானுப்பிரியா நடனத்தை பார்த்து பாராட்டாதவர்கள் யாரும் கிடையாது. தற்பொழுது வரையிலும் பானுப்பிரியா அளவிற்கு எவராலும் நடனம் ஆட முடியாது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் பானுப்பிரியா 1998ஆம் ஆண்டு ஆதரஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 2005 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமான மகளிர் மட்டும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பானுப்பிரியா நடனப் பள்ளியில் ஆரம்பிப்பதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.