சமீப காலமாக எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஆண் பெண் இருவருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது அட்ஜஸ்ட்மென்ட் ப்ராபளம் தான் அதிலும் முக்கியமாக பார்க்கப்படுவது திரைத்துறையில் தான் பெண்களுக்கு மிகப்பெரிய தொல்லையாகவும் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரை திருப்திப்படுத்தினால் மட்டுமே படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை தற்பொழுது சினிமாவில் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய்யுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஒருவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டது குறித்தும வெளிப்படையாக பேசி உள்ளார் பிரபல நடிகை.
நடிகை பாலாம்பிகா ஒரு சில திரைப்படங்களிலும் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார் இவர் வேறு யாரும் கிடையாது பழம் பெரும் இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்தவர். எப்படியாவது தன்னுடைய மகளை நடிகையாக்க வேண்டும் என நினைத்து சினிமாவில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார் பாலாம்பிகாவின் அப்பா.
இவர் முதன்முதலாக தம்பிக்கு ஒரு பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதன் பிறகு பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவர் அப்பா நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டு விட்டாராம்.
அதிலும் பாலாம்பிகா அவர்களுக்கு விஜய்க்கு ஜோடியாகவும், பிரசாந்திற்கு ஜோடியாகவும் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என சொன்னதற்கு பாலாம்பிகாவின் தந்தை அட்ஜஸ்மெண்டுக்கு ஒத்துக்கவில்லையாம் இதனால்தான் அந்த படத்தின் வாய்ப்பை பாலாம்பிகா இழந்ததாக கூறியுள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன் என புலம்புகிறாராம் அதுமட்டுமில்லாமல் நடித்திருந்தால் என்னுடைய ரேஞ்ச் வேற மாதிரி இருந்திருக்கும் எல்லாத்துக்கும் காரணம் என் அப்பா தான் என ஒரு பேட்டியில் பாலாம்பிகா புலம்பியுள்ளார் இதற்கு பேசிய நடிகை சகிலா அட்ஜஸ்ட்மென்ட்க்கு அப்ப ஓகே சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறாயா? என கேட்டுள்ளார்.
அதற்கு பலாம்பிகா இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல எல்லோரும் தான் நடிக்கிறாங்க என் அப்பா தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்ன செய்வது என பேசியுள்ளார்.