தற்பொழுது சினிமாவில் இருந்து வரும் ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்கள் இருக்கிறார்கள் மேலும் இவர்களுக்கென ஒரு தனி அந்தஸ்து உருவாகிய நிலையில் தங்களுடைய முதல் படத்திலேயே பல விருதுகளையும் பெற்று சாதித்து இருக்கிறார்கள் அந்த வகையில் அருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் அதிதி பாலன்.
இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும் இந்த படத்திற்கு முன்பு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அருவி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
மேலும் இவருடைய சிறந்த நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து சில மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த அதிதி பாலன் தற்பொழுது நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படங்களில் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த பலரும் அருவி படத்தில் பார்த்த நடிகை அதிதி பாலா இது என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
ஏனென்றால் அருவி திரைப்படத்தில் சிறிய வயது பெண்ணாக மிகவும் ஒல்லியாக இருப்பார் மேலும் பார்ப்பதற்கே பாவமாக இருப்பது போல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது உடல் எடையை கூட்டி புடவையில் குடும்பப் பாங்கான போட்டோ சூட் நடத்தியுள்ளார் எனவே இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டாங்களா அதிதி பாலன் என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.