நீ கலர் புடவையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை அதுல்யா ரவி – வைரல் புகைப்படம் இதோ.

athulya-ravi
athulya-ravi

வெள்ளித்திரையில் இளம் நடிகைகள் பலரும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி முன்னேறிக் கொண்டே வருகின்றனர். அந்த வகையில் தமிழில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் சின்னப் பெண்ணாக  அறிமுகமானவர் அதுல்யா ரவி. பின்பு இவர் விஷ்ணு விஷாலின் கதாநாயகன் என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

பின்பு  சமுத்திரகனி உடன் இணைந்து ஏமாளி என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு,  அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அதுல்யா.

தமிழ் சினிமாவில்  பெரும்பாளான நடிகைகள் பலரும் வெள்ளித் திரையில் அறிமுகமாகி பின் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலை தளங்களில்  பதிவிட்டு வருவார்கள். அந்த வகையில் அதுல்யா ரவி  கவர்ச்சியான புகைப்படங்களை பெரும்பாலும் இணையதளத்தில் வெளியிடுவதும் இல்லை மற்றும் அவர் நடிக்கும் படங்களிலும் அதிகம் கவர்ச்சியை காட்டி நடிப்பதில்லை.

இருந்தாலும் சமூக வலை தளங்களில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். மேலும் தற்போது இவர் முருங்ககாய் சிப்ஸ் மற்றும் எண்ணித் துணிக ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இது போக மேலும் சில பட வாய்ப்புகளும் இவரை தேடி வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் புடவையில் நடிகை அதுல்யா  ரவியின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி வருகின்றன.

athulya-ravi
athulya-ravi
athulya-ravi
athulya-ravi