சமீப காலங்களாக திரைப்படங்களில் நடித்தவரும் ஏராளமான நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கட்டுவது ரசிகர்களின் கனவு கண்ணியாக மாறி உள்ளவர்தான் நடிகை ஆத்மிகா. இவர் ஹிப்பாப் ஆதி நடிப்பில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடைய முதல் திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்ததால் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் விஜய் ஆண்டனிவுடன் இணைந்து கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் தனது படும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ‘பாக்கியம் உள்ளவர்கள் எணியின் வழியாக சுலபமான வழியை பெறுவதை பார்ப்பது நல்லது, மீதமுள்ளவர்கள் பார்த்துக்கலாம், என குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் ஆத்மிகா ஷங்கரின் மகள் அதிதியை தான் இப்படி கூறுகிறார் என கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் ஆத்மிகா எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சங்கரின் மகள் அதிதி தான் நடிக்கும் முதல் படத்திலேயே பெரிய நடிகரான கார்த்திக்வுடன் இணைந்து விருமான் படத்தில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயனுடனும் இணைந்து நடித்து வருகிறார். இவ்வாறு தனது அப்பா இயக்குனர் என்பதால் அதிதி சங்கர் எடுத்தவுடன் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார் என்பதனால் ஆத்மிகா இதுபோன்ற பதிவை வெளியிட்டு உள்ளார் என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகிறார்கள்.