நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா, தாத்தா பிரபல நடிகரா.! இத்தனை நாளா இது தெரியாம போச்சே..

aishwarya rajesh
aishwarya rajesh

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் கதைக்கும் தன்னுடைய கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கேரக்டரும் மிகவும் வித்தியாசமானதாக இருந்து வருகிறது.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் தன சிறந்த நடிப்பு திறமை இவர் வெளிப்படுத்தி வருவதால் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது. பொதுவாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது விடா முயற்சி ஆனால் சினிமாவில் வளர்ந்துள்ளார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இத்தனை நாட்களாக ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தான் வளர்ந்துள்ளார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம் ஆனால் இவருடைய அப்பா,தாத்தா இருவரும் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்துள்ளார்கள்.

அதாவது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாத்தா அமர்நாத் இவர் பல தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக தடுத்திருக்கிறாரா. மேலும் ஹிந்தியில் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய அப்பா ராஜேஷ் பிரபல நடிகர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை ஆனால் அவர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வில்லன் போன்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் இவருடைய அத்தை ஸ்ரீ லட்சுமி இவரும் தெலுங்கில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு சினிமா பின்னணி குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் நடிகையர் ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அவருடைய ஆசையின்படியே டான்ஸ் நிகழச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அதன் பிறகு தான் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.

Ishwariya-rajesh-father
Ishwariya-rajesh-father

ஐஸ்வயார் ராஜேஷ்க்கு எட்டு வயது இருக்கும் பொழுது இவருடைய தந்தை இறந்துவிட்டார் அதன் பிறகு சில வருடங்களிலேயே ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன்களுக்கு அடுத்தடுத்த உயிரிழந்து விட்டனர். தற்பொழுது தனது அம்மா மற்றும் அண்ணன் மணிகண்டன் உடன் வாழ்ந்து வருகிறார் மேலும் இவருடைய அண்ணன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சிகள் தனது மனைவியுடன் கலந்து கொண்டார் அதோடு மட்டுமல்லாமல் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.