தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தான் அசின் இவ்வாறு பிரபலமான நடிகை தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா விஜய் அஜித் விக்ரம் என பல நடிகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியது மட்டும் இல்லாமல் கமலஹாசன் உடன் கூட தசாவதாரம் என்ற திரைப்படத்தில் நடித்த மாபெரும் வெற்றி தந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை அசின் தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நமது நடிகை பிரபல மைக்ரோ மேக்ஸ் நிறுவனரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் அந்த வகையில் இவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது அவருடைய பெயர் அரின் என வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நமது நடிகை அசின் எப்பொழுதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம் கிடையாது அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகளின் புகைப்படத்தை அடிக்கடி பதிவேற்றம் செய்வது வழக்கம் தான் இந்நிலையில் சமீபத்தில் நான்கு வயதாகும் அசின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அசின் மகள் இவ்வளவு அழகாக இருக்கிறார் என கூறியது மட்டும் இல்லாமல் இவ்வளவு பெரியதாக வளர்ந்து விட்டார் என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.