தென்னிந்திய சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்திருந்த நடிகைகளில் ஒருவர் அசின் ஆரம்பத்தில் பிற மொழிகளில் நடித்து வந்த இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவரது நடிப்பு சூப்பராக இருந்தது மட்டுமில்லாமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து நடிகை அசினுக்கு தமிழ் திரை உலகில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோவின் படங்களில் அடுத்தடுத்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டு ஓடினார். வெற்றியை மட்டுமே சம்பாதித்து வந்த இவருக்கு ரசிகர்களும் ஏராளமாக உருவாகினர்.
சினிமாவில் மேலும் மேலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஒரு கட்டத்தில் திருமண விஷயத்தில் ஈடுபட்டார். 2017 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற பிரபலத்தை கல்யாணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்பொழுது 5 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்து கொண்ட பிறகு படிப்படியாக சினிமா உலகிலிருந்து விலகி குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு தற்போது சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை அசின் மகள் புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் அப்படியே அம்மாவை உறித்து வைத்திருக்கிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் ஹீரோயின் ஆக வர அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருப்பதாக கூறியும் கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை அசின் மகளை நீங்களே பாருங்கள்.