பொதுவாக சினிமா என்றாலே நடிகைகள் கலராக மிகவும் அழகாக இருந்தால் மட்டுமே அவரை முன்னணி நடிகையாக ஏற்றுக்கொள்வார்கள் அதுமட்டுமல்லாமல் அப்படிப்பட்டவர்களுக்கு தான் ரசிகர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைத்து வரும். ஆனால் முதன்முறையாக கருப்பாக இருந்தாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி தற்பொழுது கருப்பு பேரழகியாக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவர் நடிப்பில் காக்கா முட்டை திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படம் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.பொதுவாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் அவ்வளவு சீக்கிரத்தில் அம்மா கேரக்டரில் நடிப்பது கடினம் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியெல்லாம் செய்யாமல் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரண்டு திரை உலகிலும் பல படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பூமிகா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு சமூகத்தில் தேவையான கருத்துக்கள் தரும் திரைப் படமாக அமைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் ஐயப்பனும் கோரியும் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். அதோடு ரிபப்ளிக் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது கொரோனா காரணத்தினால் அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டுவுள்ளது. அந்தவகையில் திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலிருந்து வரும் பல நடிகைகள் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஐஸ்வரியா ராஜேஷ் தனது மரு மகனுடன் இணைந்து ஏ ஆர் ரகுமானின் பாடலான ஓகே கண்மணியே என்ற பாடலுக்கு கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.