அய்யாசாமி அது நான் கிடையாது. அங்க சுத்தி இங்க சுத்தி என்கிட்டயே வரிங்களே புலம்பி தள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

ashwariya-rajesh-5
ashwariya-rajesh-5

ஒரு நடிகை மிகவும் கலராக அழகாக இருந்தால் மட்டும் தான் அவரை நான் முன்னணி நடிகையாக ஏற்றுக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களும் அழகாக இருக்கும் நடிகைகளை பார்த்து தான் தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பார்கள்.

ஆனால் அழகு ஒன்றும் பெரிதல்ல திறமை இருந்தாலும் சினிமாவில் பிரபலமடைந்து சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கருப்பு பேரழகி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்பொழுது சர்ஜரி செய்துகொண்டு கலராக அழகாக இருந்தாலும் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் கருப்பாக சுமாராகத் தான்  இருந்தார்.

அந்த வகையில் இவர் காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்து தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு தான் இவரை முன்னணி நடிகர்களாக சினிமா மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். தற்பொழுது இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சிலர் முன்னணி நடிகைகளை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க விரும்பும் பொழுது அந்த நடிகையிடம் கால்ஷீட் இல்லை என்றால் நேரடியாக ஐஸ்வர்யா ராஜேஷை அணுகி விடுகிறார்களாம்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தாலும் அந்த வெற்றியில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பெரிதாக மகிழ்ச்சி இல்லையாம்.

ஏனென்றால் இத்திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பல படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறதாம். இப்படிப்பட்ட நிலையில் தான் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷ் நான் எந்த திரைப்படத்திலும் தங்கையாக நடிக்க வில்லை. இதற்கு மேல் தங்கையாகவும் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya-rajesh
aishwarya-rajesh