நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இதுவரை 75% முடிந்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. தற்போது இந்தியாவை சுற்றியே சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் சென்னை அடுத்ததாக டில்லி தற்போது கேரளா என படக்குழு சுற்றி வருகிறது. இந்த திரைப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் அல்லது வேறு முக்கிய நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக பீஸ்ட் படத்திலிருந்து அவ்வப்போது தகவல்கள் கசிந்து ஒழுகுது. தற்போது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து உள்ளதால் நெல்சன் திலிப் குமாரை அழைத்து தற்போது கண்டித்துள்ளனர்.
இதனை அடுத்து வரும் படம் முழுக்க பல கட்டளைகளை போட்டு உள்ளார். இந்த திரைப்படம் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இன்றுவரை நெல்சன் திலிப்குமார் இயக்கிய டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏற்றார்போல திறமையான நடிகர்களை தற்போது தேர்ந்தெடுத்து உள்ளது.அந்த வகையில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகி பாபு என ஒரு பட்டாளமே களத்தில் இறங்கி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே.
சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் அவரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு பீஸ்ட் படத்தில் நடித்து வரும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.