ஒரு திரைப்படம் ஹிட்டானதும் சம்பளத்தை ஒரேடியாக உயர்த்திய சூரரைப்போற்று நடிகை அபர்ணா முரளி !!!

abarna
abarna

actress aparna murali increased her salary on crores;தமிழ் திரையுலகில் சூர்யாவின் ரசிகர்களுக்கு எந்த ஆண்டும் இல்லாத ஒரு சந்தோஷம் இந்த ஆண்டு அவர்களுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.

ஏனென்றால் சூர்யா நடித்திருந்த சூரரைப்போற்று என்ற திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்த படம் வெளிவந்த முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

மேலும் ஏர்டெலக்கான் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வைத்து தழுவி எடுக்கப்பட்ட படமாக அமைந்துள்ளது

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா முரளி மற்றும்  சூர்யாவுக்கு அம்மாவாக ஊர்வசியும் நடித்திருப்பார்.

அபர்ணா முரளி ஏற்கனவே தமிழில் சர்வம் தாளமயம், 8 தோட்டாக்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் அப்போது இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகவில்லை.

சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் தற்போது ஏராளம் கூடிக்கொன்ட்டே போகிறது.

இவரைப் பற்றி சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல்கள் வெளிவந்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் இவர் லட்சக்கணக்கில் படங்களுக்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கோடிக்கணக்கில் வாங்கப் போகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.