இந்த 3 நடிகர்களுடன் ரகசிய உறவில் இருந்தாரா அனுயா..? வெளியான வீடியோவால் பரபரப்பு.? முற்றுப்புள்ளி வைத்த நடிகை.

anuya
anuya

anuya : தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்துவிட்டு பேரையும் புகழையும் பெற்று விடுவார்கள் அதே போல் திடீரென அந்த நடிகைகள் காணாமல் போய்விடுவார்கள் அந்த வகையில் ஜீவா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியாகிய சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா. அனுயா தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே பேரையும் புகழையும் பெற்று விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை பொறியியல் படிப்பை படித்து விட்டு சினிமாவுக்கு நுழைந்த இவர் சினிமாவிலும் ஜொலிக்க முடியாமல் போனது இந்த நிலையில் சமீபத்தில் instagram பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் அதில் எனக்கு தமிழ் கொஞ்சம் தான் தெரியும் நான் துபாயில் பிறந்தவள் என் அப்பா பகவத் மருத்துவர் என் அம்மா பயிற்சி மருத்துவராக இருக்கிறார்.

நான் நடிகர் விஜய் ஆண்டனி, சுந்தர் சி, ஹரிகுமார் மற்றும் ஜீவா ஆகியோருடன் உறவில் இருந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது அதுயெல்லாம் தவறான தகவல்கள் நான் தனியாகத்தான் இருக்கிறேன் என பகிரங்கமாக அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் தனியாக இருக்கிறீர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாமே என கேள்வி எழுப்பியுள்ளார் இதற்கு அனுயா என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாருமே கிடையாது அதனால் எனக்கு திருமணம் வேண்டாம் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் அனுயா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்பொழுது வெளியிட்டுள்ள வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.