தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஆரம்பத்தில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் உயர்த்திக்கொண்டார் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் சோலோ படங்களில் நடித்தார்.
அந்த படங்களுக்காக தனது உடம்பை ஏற்றி இறங்கியும் நடித்து வந்தார். அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தாறுமாறாக உடல் எடையை ஏற்றி நடித்தார். அதன் பிறகு நடிகை அனுஷ்கா உடல் நடையை குறைக்க முடியாமல் ரொம்ப அவதிப்பட்டார் அதனால் அவருக்கு பட வாய்ப்புவும் குறைந்தது மீடியா வெளிச்சத்திற்கு வர முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.
முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் இழந்தார். எப்படியோ விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக ஒர்க் அவுட்டு மற்றும் சில ஆர்கானிக் ஃபுட்டுக்களை எல்லாம் எடுத்து சாப்பிட்டு தான் பார்த்தார் ஆனால் அவரால் உடல் எடையை மட்டும் குறைக்க முடியாமல் போனது இருப்பினும் அவ்வபொழுது பட வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் இருந்தது.
அந்த வகையில் பாகுபலி 1, 2 போன்ற படங்களில் கமிட்டாகியிருந்தார் ராஜமௌலி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரை ஒல்லியாக எப்படியோ காண்பித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மீண்டும் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடக்கப்பட்டார்.
இதே போல் போய் கொண்டு இருந்தால் தனது சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்ந்து தற்போது ஒரு வழியாக எப்படியோ உடல் எடையை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார் அண்மையில் நடிகை அனுஷ்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் நடிகை அனுஷ்கா அதிரடியாக உடல் எடையை குறைத்து செம சூப்பராக இருக்கிறார் இதோ நீங்களே பாருங்கள்.