தென்னிந்திய திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை அனுஷ்கா ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவருக்கான ரசிகர் கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த அனுஷ்கா மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஒரு கட்டத்தில் முயன்றார் அப்பொழுது இவர் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் இஞ்சி இடுப்பழகி அந்த திரைப்படத்திற்காக தனது உடல் எடையை சற்று கூட்டினார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா இன்றுவரையிலும் தள்ளாடி வருகிறார்.
இதனால் அவர் தனது மார்க்கெட்டையும் மிகப்பெரிய அளவில் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரை உலகில் கவனிக்க படக்கூடிய நடிகையாக இருந்த அனுஷ்கா தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க அனுஷ்கா ரெடியாக தான் இருந்து வருகிறார். தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையைக் குறைத்து வரும் அனுஷ்கா வெகுவிரைவிலேயே சிக்கென்று மாறி டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி தனது பழைய இடத்தை பிடிப்பார் என அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது காரணம் சினிமா ஆரம்பத்திலேயே பல டாப் நடிகையின் படங்களை கைப்பற்றியதால் இவர் வெகு அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் ஒருவராக இருந்து வந்தார். இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் திரை வட்டாரங்கள் பக்கத்தில் இருந்து கூறப்படுகிறது.