பொதுவாக நடிகைகள் என்றாலே தங்களது இளமையும் அழகும் குறையும் வரை மட்டும்தான் அவர்களால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முடியும் அதோடுமட்டுமல்லாமல் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அப்பொழுது மட்டும் தான் பெற முடியும். குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு அவர்களால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாது.
அந்த வகையில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் எந்த தயாரிப்பாளரும் தரமாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் கடந்த சில வருடங்களாக எந்த படத்திலும் நடிகை அனுஷ்காவை பார்க்க முடியவில்லை, எங்குதான் சென்றார் ?, என்ன ஆச்சு அவருக்கு? என்று ரசிகர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
நடிகை அனுஷ்காவிற்கு தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம்,இவர் கடைசியாக நடிகர் மாதவனுடன் இணைந்து நிசப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஏனென்றால் அவரது உடல் எடை கூடியதே காரணமாகும். ஆர்யாவுடன் இவர் இணைந்து நடித்திருந்த இஞ்சி இடுப்பழகி என்னும் திரைப் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிகமாக கூட்டினார்.
அனுஷ்கா யோகா டீச்சராக இருப்பதனால் எளிமையாக உடல் எடையை குறைத்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டார், ஆனால் அந்த நம்பிக்கை பொய்யானது. அவ்வளவு எளிதாக அவரால் அவரது உடல் எடையை குறைக்க இயலவில்லை. சரி போகட்டும் வயது கூடிக்கொண்டே போகிறது திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.
ஆனால் திருமணமும் ஏதோ சில காரணங்களால் கைகூடவில்லை. ஆகையால் தனது சினிமா வாழ்க்கையில் சிறிய பிரேக் எடுக்க வேண்டும் என்று விரும்பினார் அதன்பிறகு தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் உடல் எடையை குறைத்தார்.அதன் விளைவாக தற்போது இரண்டு படங்களில் நடிக்க நடிகை அனுஷ்காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறியப்படுகிறது. இவர் தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அனைத்து படத்திலும் மிக அழகாக இருப்பார். மேலும் ரொமான்ஸ் சீன்களும் கச்சிதமாக இருக்கும், இதனால் தான் என்னமோ இரண்டு வருடங்களுக்கு பிறகும் இரண்டு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புடன் மாஸாக என்ட்ரி கொடுக்க உள்ளார். நடிகை அனுஷ்காவின் திரை நடிப்பை ரசிக்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர்.