தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா சமீப காலங்களாக மிகவும் குண்டாக இருந்த காரணத்தினால் இவருக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தன்னுடைய உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள நிலையில் அவரைப் பார்க்கும் பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்களாம் அது குறித்த புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார். மேலும் பல ஹிட் திரைப்படங்களிலும் நடித்து வந்த இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை உயர்த்திய நிலையில் பிறகு அந்த எடையை குறைக்க முடியவில்லை மேலும் இவர் பல முயற்சிகள் செய்தும் இவரால் பழைய நிலைமைக்கு வர முடியாத காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. எனவே சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த இவர் சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் சிறிது இடைவெளிக்கு பிறகு நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படமும் படுதோல்வி அடைந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சில திரைப்படங்களில் அனுஷ்கா நடித்துவரும் நிலையில் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளாராம். மேலும் படப்பிடிப்பில் அனுஷ்காவை பார்க்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் அனுஷ்காவாய் இது என ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய நிலைமையை அடைந்துள்ளார்.
மேலும் இவர் சமீபத்தில் திரைப்படம் ஒன்று நடித்து வரும் நிலையில் செஃப்பாக மாறி சமைப்பது போல் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதிலும் அனுஷ்கா மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது எனவே ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.