சினிமா என்றாலே பொதுவாக நடிகர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும் என்னதான் நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வந்தாலும் சில ஆண்டுகள் மட்டும் தான் அவர்களால் தொடர்ந்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் இருக்கமுடியும். அதிலும் ஒரு சில நடிகைகள் அவர்கள் செய்யும் சில தவறுகளினால் தங்களது மார்க்கெட்டை இழந்தவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. சொல்லப்போனால் நயன்தாராவிற்கு பதிலாக அனுஷ்காதான் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்க வேண்டும் ஆனால் இவர் நடித்த சில திரைப்படங்கள் இவருக்கு சிக்கலை ஏற்படுத்தியதால் தற்போது திரைப்படங்களில் பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.
அந்தவகையில் கமர்சியல் திரைப்படங்கள் மற்றும் கதையின் கதாநாயகி என எந்த திரைப்படங்களாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து தந்தார். இவ்வாறு தமிழையும் தாண்டி தெலுங்கிலும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக தனது உடல் எடையை மிகவும் உயர்த்தினார். ஆனால் தற்பொழுது வரையிலும் அந்த உடல் எடையை குறைக்க முடியாமல் பல வருடங்களாக கஷ்டப்பட்டு வருகிறார் இதன் காரணமாகவே இவருக்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்பொழுது தான் ஓரளவிற்கு தனது உடல் எடையை குறைக்க இருந்தாலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பெரிதாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தன்னை விட வயது குறைவான இளம் நடிகர்கள் மற்றும் புதுமுக நடிகர்கள் ஆகியோர்களின் திரைப்படங்களில் தான் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் தன்னை விட வயது குறைவான இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் உருவாகுமா என்பதே சந்தேகம். இதன் காரணமாக அனுஷ்கா கதறி அழுவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.