தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக பார்க்கப்படுபவர் அனுஷ்கா. இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து ஓடிக் கொண்டிருப்பதால் இவரது மார்க்கெட் குறையாமல் இருக்கிறது ஆனால் அண்மை காலமாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது அவரது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.
அதற்கு முழுக்க முழுக்க காரணமே அனுஷ்கா தான் ஆரம்பத்தில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை குவித்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக அதிரடியாக தனது உடல் எடையை ஏற்றினார். அந்த படம் வெளிவந்து தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் அனுஷ்காவுக்கு உடல் எடையை குறைக்கவும் முடியாமல் போனது.
இதனால் அவரது பட வாய்ப்பு குறைய தொடங்கியது மேலும் காதல் தோல்வி என அடுத்தடுத்த விஷயங்களில் சிக்கித் தவித்தார். இதிலிருந்து விடுபட அனுஷ்காவும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் ஆனால் அவரால் பழைய நிலைமைக்கு திரும்பவே முடியவில்லை. இதனால் அனுஷ்காவுக்கு பின்னால் இருந்த நடிகைகள் எல்லாம் தொடர்ந்து டாப் ஹீரோக்கள் மற்றும் சோலோ படங்களில் நடித்து அனுஷ்காவை முன்தினர்.
ஒரு வழியாக அனுஷ்கா தொடர்ந்து ஜிம் யோகா மற்றும் பல சத்தானா உணவுகளை எடுத்துக் கொண்டு உடல் எடையை அதிரடியாக குறைத்து தற்பொழுது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கிறார். அனுஷ்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பழையபடி செம சூப்பராக இருக்கிறீர்கள் இனி உங்களுக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது எனக்கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ அனுஷ்கா செம்ம ஸ்லிம்மாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..