தமிழ், தெலுங்கு, சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை அனுஷ்கா. இவரின் சிறந்த நடிப்பு திறமையினாலும் வசீகரத் தோற்றத்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததால் சினிமாவில் இவருக்கென தனி இடம் உருவானது.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் திருமணம் செய்துகொண்டால் தனது அழகு குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் இதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
அந்த வகையில் இவரின் மீதும் காதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இப்படிப்பட்ட நிலையில் அனுஷ்கா தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்திற்காக தனது தனது உடல் எடையை அதிகரித்து இருந்தார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளை செய்து ஓரளவிற்கு தனது உடல் அளவை குறைத்தாலும் பழைய நிலைமைக்கு வர முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு சுமாராக இருந்தார் இப்படிப்பட்ட மீண்டும் அனுஷ்கா பயங்கர குண்டாக மாறியுள்ளார்.
சமீபத்தில் கூட இவரின் குண்டாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது எப்பொழுது எடுத்த புகைப்படம் என்று சரியாக தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்தார்கள். ஆனால் இன்று தனது வீட்டிற்கு வெளியே மாஸ்க்கை கொஞ்சம் கீழே இறக்கி போட்டோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.